வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள குற்றச்செயல்கள் : பொதுபாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
இலங்கையில் வடக்கு மாகாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்றுவரும் 2026 பட்ஜெட் மீதான குழுநிலை விவாதத்தில் இன்றையதினம் (20) பேசியயபோதே அமைச்சர் மேற்கண்ட அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
இந்த குற்றச்செயல்களின் முறைப்பாடு தொடர்பில் அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் அதிகரித்துள்ள சைபர் கிரைம் முறைப்பாடுகள்
தினமும் சுமார் 25 சைபர் கிரைம் முறைப்பாடுகள் பதிவாகின்றன பெரும்பாலான சம்பவங்கள் வடக்கு மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளன .சைபர் கிரைம் சம்பவங்கள் கணிசமாக அதிகரித்துள்ளன.

வழங்கப்பட்ட தரவுகள் மாகாணத்தில் கூர்மையான அதிகரிப்பைக் காட்டுகின்றன, 2020 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 24 சைபர் குற்ற சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்றும், அதைத் தொடர்ந்து 2021 இல் 577, 2022 இல் 654, 2023 இல் 472 மற்றும் 2024 இல் 1,539 புகார்கள் பதிவாகியுள்ளன என்றும் குறிப்பிட்டார். 2025 ஒக்டோபர் 31 வரை 2,368 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கணினி குற்றப் புலனாய்வு துணைப் பிரிவுகள்
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பல மாவட்டங்களில் குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) கீழ் கணினி குற்றப் புலனாய்வு துணைப் பிரிவுகள் நிறுவப்பட்டிருப்பதை அவர் உறுதிப்படுத்தினார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |