நகரும் டிட்வா புயல் - மக்களே அவதானம் - 200 மி.மீக்கும் அதிகளவான மிக கனமழை
மட்டக்களப்பிலிருந்து 20 கி.மீ. தென்மேற்கில் நகர்ந்த 'டிட்வா' புயல் தற்போது திருகோணமலையிலிருந்து 50 கி.மீ. தெற்கே மையம் கொண்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (28) அதிகாலை 5.00 மணிக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பானது வடக்கு சாய்வாக வடமேற்கு நோக்கி நகரக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
அதிக மழைவீழ்ச்சி
இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று (28) அதிகாலை நிலவரப்படி அதிகபட்ச மழைவீழ்ச்சி வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிக்குளம் பிரதேசத்தில் 315 மி.மீ பதிவாகியுள்ளது.

அதன்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அலம்பில் பிரதேசத்தில் 305 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன், மூன்றாவது அதிகபட்ச மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் உள்ள கண்டியில் பதிவாகியுள்ளது, அதன் அளவு 223.9 மி.மீ ஆக உள்ளது.
இதன்படி, இலங்கையில் நிலவும் பலத்த மழை மற்றும் பலத்த காற்று நிலைமை மேலும் எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் மணிக்கு 60-70 கி.மீ வேகத்தில் மிகவும் பலத்த காற்றும், இடைக்கிடையே மணிக்கு 80-90 கி.மீ வேகத்தில் மிக பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Live tracker link - https://zoom.earth/storms/ditwah-2025/
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 1 நாள் முன்