வரலாற்றில் முதல் முறை: மட்டக்களப்பு பகுதியில் மையம் கொண்டுள்ள புயல்

Sri Lanka Climate Change Weather
By Theepan Nov 27, 2025 04:54 PM GMT
Report

டிட்வா புயலானது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது, இது தற்போது மட்டக்களப்புக்கும் அமபாறைக்கும் இடைப்பட்ட மகா ஓயா பகுதியில் மையம் கொண்டுள்ளது.

குறித்த விடயத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “இது தொடர்ந்து வடக்கு வட மேற்கு திசையில் நகரும், தற்போதைய நிலையில் இந்த புயலின் மையப்பகுதி முழுவதும் நிலத்தின் ஊடாகவே நகரும் வாய்ப்புள்ளது ஆனாலும் நகர்வுப் பாதை இன்னமும் இறுதியாகவில்லை.

இந்த புயலின் மையம் மற்றும் உள்வளையம் ஆகியன வடக்கு மாகாணத்தின் முழுப் பகுதியையும் உள்ளடக்கியே நகரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் தற்போதைய நகர்வின் படி எதிர்வரும் (02.12. 2025) அன்று வட தமிழகத்தில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது புயலின் மையம் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில் உள்ளமையால் இப்பகுதிகளில் ஒரு அசாதாரண அமைதி நிலவும் ஆனால் அது நிலையானதல்ல. இந்த புயலினால் நாடு முழுவதற்கும் எதிர்வரும் (29.11.2025) வரை மிகக் கனமழை கிடைக்கும்.

அம்பாறைக்கு நாளை பிற்பகல் முதல் படிப்படியாக மழை குறையும் ஆனாலும் எதிர்வரும் (30.11.2025) வரை மழை கிடைக்கும்.

மட்டக்களப்பு மாவட்டத்துக்கு எதிர்வரும் 29.11.2025 முதல் மழை படிப்படியாக குறைவடையும். இருப்பினும் திருகோணமலை மாவட்டத்திற்கு நாளையும் நாளை மறு தினமும் மிகக் கனமழை கிடைக்கும்.

வவுனியா மாவட்டத்துக்கு நாளையும் நாளை மறு தினமும் மிகக் கனமழை கிடைக்கும். எதிர்வரும் (01.12.2025) அன்றும் வவுனியாவின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நாளையும் நாளை மறு தினமும் மிகக் கனமழை கிடைக்கும்.

எதிர்வரும் முதலாம் திகதி மற்றும் (02.12.2025) அன்றும் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தற்போதைய நிலைமைகளின் படி மன்னார் மாவட்டத்துக்கு நாளை முதல் எதிர்வரும் (01.12.2025) வரை மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

அத்தோடு அனுராதபுரத்தில்ஸகிடைக்கும் கனமழையும் குளங்களின் வான் பாயும் நீரும் ஏற்கெனவே குறிப்பிட்டபடி அருவியாற்றின் முகத்துவாரம் மற்றும் கீழ் நீரேந்து பிரதேசங்களில் வெள்ள அனர்த்தத்தை உருவாக்கும்.

கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்கள் படிப்படியாக இன்று இரவு முதல் கனமழை முதல் மிகக்கனமழையை எதிர்கொள்ளும்.

இது எதிர்வரும் (02.12.2025) வரை தொடரும். குறிப்பு - இன்னும் சிறிது நேரத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் கன மழை கிடைக்க தொடங்கும்.

தற்போது திருகோணமலை மற்றும் வடக்கு மாகாணத்தில் காற்று மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வேகத்தில் வீசுகின்றது, இது நாளை இன்னமும் அதிகரிக்கும்.

நாளையும் தென், ஊவா மற்றும் சப்ரகமுவா மாகாணங்களுக்கு மிகக் கனமழை கிடைக்கும் ஆனால் நாளை மறுநாள் பிற்பகல் முதல் மழை படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய மற்றும் மேற்கு மாகாணங்களுக்கு நாளையும் நாளை மறுதினமும் கனமழை முதல் மிகக் கனமழை கிடைக்கும் ஆனால் எதிர்வரும் (30.11.2025) முதல் மேல மாகாணம் மற்றும் மத்திய மாகாணத்தில் மழை குறைவடையும்.

இந்த புயலின் நகர்வுப்பாதை இதுவரை இல்லாதது போன்று அமையும் என தோன்றுகின்றது இது அசாதாரணமானது.

வட மாகாணம் முழுவதையும் உள்ளடக்கிய வடக்கு நோக்கிய நகர்வு முற்றிலும் புதியது, 1867 ஆம் ஆண்டு இலங்கையில் முதல் முதலாக நில அளவைத் திணைக்களத்தின் கீழ் விஞ்ஞான முறைகளிலான வானிலை அவதானிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

அன்றிலிருந்து இன்று வரை இது போன்ற இலங்கையை மையப்படுத்திய நகர்வுப் பாதையை கொண்ட எந்த புயலோ மற்றும் தாழமுக்கமோ கொண்டிருந்ததில்லை, வரலாற்றில் இதுவே முதல் முறை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தீரத்துடன் களமாடிய மாவீரர்கள்: நினைவுகூரிய தவெக தலைவர் விஜய்

தீரத்துடன் களமாடிய மாவீரர்கள்: நினைவுகூரிய தவெக தலைவர் விஜய்

கொட்டும் மழையிலும் எழுச்சி கொண்ட துயிலும் இல்லங்கள்...!

கொட்டும் மழையிலும் எழுச்சி கொண்ட துயிலும் இல்லங்கள்...!

நெல்லியடியில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்கள் முன்னெடுப்பு

நெல்லியடியில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நினைவேந்தல்கள் முன்னெடுப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026