பாடசாலை விடுமுறை - வெளியான புதிய அறிவிப்பு
புதிய இணைப்பு
மூன்றாம் தவணையின் இறுதி கட்டத்திற்காக பாடசாலைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்தார்.
மூன்றாம் தவணையின் இறுதி கட்டத்திற்காக பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
நாட்டின் தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக விசேட அறிவிப்பு மூலம் கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உயர்தரப் பரீட்சையை மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்க கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதன் திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
இலங்கை முழுவதும் உள்ள சர்வதேச பாடசாலைகளையும் உடனடியாக மூடுமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் நிலவும் மோசமான வானிலை காரணமாக இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நலக்க கலுவேவா தெரிவித்துள்ளார்.
மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும்
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், நேற்றிலிருந்து (27) மறு அறிவிப்பு வரும் வரை பாடசாலைகள் மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுனரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 72 மணி நேரத்தில் நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 46 பேர் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது.
நவம்பர் 16 முதல் இன்று வரை பதிவான மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதாகவும், 21 பேர் காணாமல் போயுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விழிநீரால் விளக்கேற்றத் தயாராகும் தமிழர் தேசம் 1 நாள் முன்