பாகிஸ்தானை தாக்கிய கடும் புயல்: டசின் கணக்கானோர் பலி
பாகிஸ்தானின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் பல நாட்களாக நீடித்த வெப்ப அலையைத் தொடர்ந்து வீசிய சக்திவாய்ந்த புயல் காரணமாக சுமார் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதிகாரிகளால் “அழிவுகரமானது” என்று விவரிக்கப்பட்ட புயல், சனிக்கிழமை (24) பிற்பகல் மற்றும் மாலையில் பஞ்சாப் மற்றும் கைபர்-பக்துன்க்வா மாகாணங்களையும் இஸ்லாமாபாத்தையும் தாக்கியுள்ளது.
பல நாட்கள் 45°C ஐ தாண்டிய கடுமையான வெப்பத்தைத் தொடர்ந்து இந்த அழிவுகரமான வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புயலுக்கான காரணம்
சமீபத்திய வெப்ப அலையில் மூன்று முதல் நான்கு நாட்கள் வெப்பநிலை மிகவும் அதிகரித்ததாகவும், குறித்த திடீர் புயலுக்கு வெப்பத்தின் தீவிர அதிகரிப்பே காரணம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அத்துடன், இஸ்லாமாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பாரிய ஆலங்கட்டி மழைகளைக் கண்டுள்ளதால், வாகனங்கள் மற்றும் சூரிய மின்சார கலன்களும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கோடைக்காலத்தின் ஆரம்பம் மற்றும் கடுமையான வெப்ப அலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

