மக்களே அவதானம் - A9 வீதியில் நீரில் அடித்துச் சென்ற கார் - இருவர் பலி
புதிய இணைப்பு
வவுனியாவில் ஏற்ப்பட்ட வெள்ளப்பேரிடர் காரணமாக 1118குடும்பங்களை சேர்ந்த 3598 பேர் இடம்பெயர்ந்த நிலையில் 47இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் செட்டிகுளம் பிரதேச செயலாளர் பிரிவில் 599 குடும்பங்களை சேர்ந்த 1997 பேர்21 இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், வவுனியா பிரதேச செயலகபிரிவில் 191 குடும்பங்களை சேர்ந்த 605பேர் 8 முகாம்களிலும்,வவுனியா வடக்கில் 172 குடும்பங்களை சேர்ந்த 519 பேர் 10முகாம்களிலும், வவுனியா தெற்கில் 156 குடும்பங்களை சேர்ந்த 477 பேர் 8 முகாம்களிலும், தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான சமைத்த உணவுகள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலகம்,ஏனைய தனவந்தர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை வெள்ளம் வடியாத தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் அதிகமான மக்கள் தங்களது உறவினர் வீடுகளிலும் தங்கியுள்ளனர்.
அதிக நீர்வரத்து காரணமாக மாவட்டத்தில் உள்ள 83 குளங்களில் சேதம் ஏற்ப்பட்டுள்ளதுடன் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது.
இதேவேளை நேற்று மாலையின் பின்னர் வவுனியாவில் மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ளது. இதனால் தடைப்பட்டிருந்த பிரதான வீதிகள் ஊடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.


செய்தி - கபில்
முதலாம் இணைப்பு
ஏ 9 வீதியில் நீரில் அடித்துச் சென்ற நிலையில் மீட்கப்பட்ட கார் உள்ளே இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவமானது ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமாயில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் கார் ஒன்று அடித்து செல்லப்பட்டுள்ளதை அவதானித்த கிராம மக்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
ஆண் மற்றும் பெண்
குறித்த தகவலினை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இராணுவம் மற்றும் பொலிஸார் கிராம இளைஞர்களுடன் இணைந்து குறித்த காரினை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட காரினை மீடடுள்ளதுடன், காரில் பயணித்த ஆண் மற்றும் பெண் ஒருவர் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.
உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை குறித்த வீதியானது சீரற்ற காலநிலையால் வெள்ளநீர் வீதியை மூடி செல்வதன் காரணமாக நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
