இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் சிலிண்டர் வெடிப்புக்கள்! (காணொளி)
இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புக்கள் அதிகளவில் பதிவாகி வருகின்றன. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தி வருகின்றது.
இன்று மட்டும் பல இடங்களில் எரிவாயு அடுப்புக்கள் வெடித்து சிதறியுள்ளன.
* மட்டக்களப்பு - திராய்மடு சுவிஸ் கிராமம் பகுதியில் இன்று காலை எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியுள்ளது.
* தலவாக்கலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை, வோக்கர்ஸ் பகுதியில் மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் எரிவாயு அடுப்பு ஒன்று வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
* வட்டுக்கோட்டையில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
* அராலிப் பகுதியிலும் இரண்டு வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இது தொடர்பான முழுமையான விடயங்களுடன் வெளிவருகின்றது இன்றைய பிரதான செய்திகளின் தொகுப்பு,