தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு விடுத்துள்ள அறிவித்தல்
நாட்டில் நாளாந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 335ஐ கடந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலையின் காரணமாக டெங்கு நோய் பெருக்கம் அதிகரிப்பதோடு, உயிரிழப்புக்களும் அதிகரித்து வருகின்றது.
இவ்விடயம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
மேல் மாகாணம்
“கடந்த 25 தினங்களில் 8,728 டெங்கு நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 85,216 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்திலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , அந்த மாகாணத்தில் மொத்தமாக 38,986 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.” என குறிப்பிட்டுள்ளது.
டெங்கு அபாயம்
அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்திலும் டெங்கு அபாயம் அதிகரித்து காணப்படுகின்றதோடு, டிசம்பர் மாதத்தில் இதுவரை 945 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் டெங்கு நோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளதுடன் நேற்றைய தினம் 40 டெங்கு நோயாளிகளுக்கு மேல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம், கோப்பாய், சண்டிலிப்பாய் ஆகிய பிரதேசங்களில் டெங்கு நூளம்பின் தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |