உயிர்த்தஞாயிறு தாக்குதல் தினத்தில் சேதமாக்கப்பட்ட மாதாவின் திருவுருவச்சிலை
damage
easter attack
beruwalai
mother of god
By Sumithiran
பேருவளை, மகொன காலி வீதியிலுள்ள புனித மரியாள் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த மாதாவின் திருவுருவச் சிலை நாசப்படுத்தப்பட்டமை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெற்று மூன்று வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று இவ்வாறான நாசகார செயற்பாடுகளை வன்மையாக கண்டிக்கின்றோம் என புனித மேரிஸ் மிஷனரி சேவைகள் தேவாலயத்தின் செயலாளர் ரொஹான் பேட்ரிக் பெரேரா தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பயாகல காவல் நிலைய பொறுப்பதிகாரி அருண சாந்த ரணவீர மற்றும் காவல்துறை குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி