மாணவியுடன் தவறான பழக்கத்தை ஏற்படுத்த ஆசிரியர் செய்த செயல் - விசாரணைகள் ஆரம்பம்!
பாடசாலையின் நடன ஆசிரியர் ஒருவர் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு தொடர்ச்சியாக வட்ஸ்அப் மூலம் செய்தி அனுப்பிய விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாணவியுடன் தவறான பழக்கத்தை ஏற்படுத்த குறித்த வட்ஸ்அப் செய்திகளை அனுப்பியுள்ளதாக ஆசிரியரை சந்தேகிப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.
சம்பவத்தை அறிந்த நபர் ஒருவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அத்தனகல்ல பிரதேச செயலகத்தின் சிறுவர் உரிமைகள் ஊக்குவிப்பு பிரிவினர் ஆரம்பகட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
விசாரணை அறிக்கை
வெயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த நடன ஆசிரியர் ஒருவர் அதே பாடசாலையில் தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்கு வட்ஸ்அப் மூலம் தொடர்ச்சியாக செய்தி அனுப்பிய விடயம் தொடர்பான விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை வலயக் கல்வி அலுவலகத்திற்கு அறிவித்துள்ளது.
இதேவேளை, ஆசிரியை அனுப்பிய செய்திகளின் ஸ்கிரீன் ஷாட்களை மாணவி தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம், பாடசாலை அதிபர் தனது மகளை அழைத்து பலர் முன்னிலையில் பல்வேறு கேள்விகளை கேட்டதாக குறித்த மாணவியின் தாயார் கூறியுள்ளார்.
