அநுர தரப்பால் வடக்கிற்கு காத்திருக்கும் பேராபத்து
தங்களது சபையில் இருந்து அனுப்புகின்ற வேண்டுகோள்களை கண்களை மூடி கொண்டு கையொப்பமிடுவதாக தெரிவித்த ஜனாதிபதியின் கருத்து வடக்கிற்கு பேராபத்தை ஏற்படுத்த கூடும் என டெலோ கட்சியின் ஊடகப் பேச்சாளர் குரு சுவாமி சுரேந்திரன் (Gurusuwami Surenthiran) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (20.04.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த கால அரசு தங்களது கட்சிகளில் இருந்து அனுப்பப்பட்ட வேண்டுகோள்களில் கண்களை மூடி கொண்டு கையொப்பமிட்டதாலேயே நாடு வங்குரோத்து நிலையை அடைந்தது என்பதை அனுர அரசு மறந்து விட கூடாது.
அதிலிருந்து மீள்வோம், புதிய மாற்றத்தை கொண்டு வருவோம் என கூறி மீண்டும் கண்களை மூடி கொண்டு கையொப்பமிடுவதாக தெரிவித்த ஜனாதிபதியின் கருத்து அபாயகரமான சபை நிர்வாகத்தை எடுத்துகாட்டுகிறது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவற்றை கீழுள்ள காணொளியில் காண்க...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
