அவுஸ்திரேலிய சுற்றுப்பயண அறிக்கை வெளியீடு - தனுஷ்கவிற்கு விதிக்கப்பட்ட புதிய தடை
இலங்கை துடுப்பாட்ட அணியின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயண அறிக்கையினுடைய தடயவியல் தணிக்கை விபரம் கணக்காய்வாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தனுஷ்க குணதிலக்க தொடர்பான சம்பவம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கும் வரை அனைத்து வகையான துடுப்பாட்ட போட்டிகளையும் தடை செய்யுமாறு சட்டமா அதிபர் தமக்கு பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிச் சுற்றுப்பயணத்தின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பான ஐவரடங்கிய குழு அறிக்கை அண்மையில் விளையாட்டு அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமை
கடந்த ஆண்டு நவம்பர் 6 ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் சிட்னியில் பெண்ணொருவரை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ் தனுஷ்க குணதிலக்க கைது செய்யப்பட்டார்.
எவ்வாறாயினும், கடுமையான எச்சரிக்கைகள் மற்றும் விதிகளுடன் சிட்னி நீதிமன்றத்தால் தனுஷ்க பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மேலும் அவர் நாட்டை விட்டு வெளியேற அனுமதி வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

