யூதர்களை கொடுமையானவர்களாக மாற்றியதில் கிறிஸ்தவர்களின் பங்கு (காணோளி)
காசாவில் இஸ்ரேல் படைகள் மேற்கொள்கின்ற கொடூரங்கள் வார்த்தைகளினால் சொல்ல முடியாது.
வைத்தியசாலைகள் மீதான குண்டு வீச்சுக்கள் அகதி முகாம்கள் மீதான தாக்குதல்கள் எந்த வித சர்வதேச விதிகளையும் மதிக்காமல் பலஸ்தீன மக்கள் மீது வன்மத்தை வெளிப்படுத்தும் இஸ்ரேலின் செயல் நிச்சயமாக கண்டிக்கப்பட வேண்டிய செயல்களே என்பதில் சந்தேகம் இல்லை.
கி.மு 721 ஆம் ஆண்டில் ஹஸிதியர்களும் கி.மு 583 ஆம் ஆண்டு பதுலோனியர்களும் அதனை தொடர்ந்து கிரேக்கர்களும் உரோமர்கள் என்று யூதர்களை இன அழிப்பு செய்த நீண்ட வரலாறு இந்த பூமியில் இருக்கின்றது.
யூதர்கள் பட்ட கஷ்டங்கள் போன்று வேறு எந்த இனத்தவருமே கஷ்டப்பட்டது கிடையாது. அவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கின்றது.
60 லட்சம் யூதர்களை ஹிட்லர் கொலை செய்தார், இது மாத்திரம் தான் அனைவருக்கும தெரியும். ஆனால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான ஆண்டுகளாக யூதர்கள் மீதான படுகொலைகளும் இன அழிப்புக்களும் பல்வேறு தரப்புக்களால் தொடரந்து மேற்கொள்ளபட்டு வருகிறது.
ஆனால் இன்றைய நிதர்சனம் நிகழ்ச்சியில் பார்க்கவிருக்கின்ற விடயம் என்வென்றால் யூதர்களை இப்படியான ஒரு கொடுமையான இனமாக மாற்றியதில் மிகப்பெரிய பங்கு கிறிஸ்தவர்களுக்கு இருக்கின்றது என்ற வரலாற்று உண்மையை தான்.