ரணிலுக்கு எதிரான சட்ட நடவடிக்கை : திகதி குறித்தது நீதிமன்றம்
பொது சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டு இன்று (26) பிற்பகல் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை ஒக்டோபர் 29 ஆம் திகதி மீண்டும் தொடங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (26) முடிவு செய்துள்ளது.
பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் ஜனாதிபதி,கடந்த 22 ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவின் உத்தரவின் பேரில் இன்று (26)வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பிணையில் விடுவிக்க உத்தரவு
அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புகார்கள் மற்றும் உண்மைகளை பரிசீலித்த பின்னர், முன்னாள் ஜனாதிபதியை இன்று பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அவர் மீதான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி தொடங்கும் என நீதவான் அறிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
you may like this

