ஹிருணிகா உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு! நீதிமன்றின் உத்தரவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் போது, கொழும்பு குருந்துவத்தை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீதிகளை மறித்து காவல்துறை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் இன்று (17) அழைக்கப்பட்டபோதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகள் நிறைவு
இதன்படி, சம்பவம் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அது தொடர்பான கோவைகள் தயாரித்து மேலதிக சட்ட ஆலோசனைகளுக்காகச் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குருந்துவத்தை காவல்துறையினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வழக்கை நவம்பர் 2 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான், அன்றைய தினம் சட்டமா அதிபரின் ஆலோசனைகள் மற்றும் வழக்குகளின் முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறும் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |