ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் கைது!
அஹுங்கல்ல, கல்பொக்க பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 19 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் 204 கிராம் 660 மில்லிகிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஹுங்கல்ல காவல் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்ப்பின்போதே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
19 வயது இளைஞர்
இரகசிய தகவலுக்கு அமைய காவல்துறை சுற்றிவளைப்பில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த போதைப்பொருள் எங்கிருந்து பெறப்பட்டது, யாரிடம் ஒப்படைப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டது மற்றும் சந்தேகநபருக்கு பின்னால் உள்ள போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பான தகவல்களை கண்டறியும் நோக்கில் அஹுங்கல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |