குறைந்த வருமானம் பெறுவோருக்கான பணம்! முழுமையான தொகை விரைவில்
மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஆராய்ந்ததன் பின்னர் மேலும் 182,140 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க(Chehan Semasinghe) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த குடும்பங்களுக்கு இதுவரையில் செலுத்தப்பட வேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்ட எதிர்வரும் 18 ஆம் திகதிக்குள் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கிக் கணக்கு
அத்தோடு இதுவரையில் 18,54,000 அஸ்வெசும பயனாளர்களுக்காக 58.5 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவை பெற்றுக் கொள்வதற்கு முழுமையான தகைமைகளைக் கொண்டுள்ள 200,000 குடும்பங்கள் இதுவரையில் தங்களது வங்கிக் கணக்குகளை ஆரம்பிக்கவில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |