அறிவிக்கப்பட்டது திகதி: விசாரணையை புறக்கணிக்கும் ரணில்!!
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முன்னிலையாவதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் 25 ஆம் திகதி (ஏப்ரல்) முற்பகல் 9.30 மணிக்கு ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளுக்காக வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
ரணிலின் பதில்
குறித்த விடயம் தொடர்பில், கடந்த 17 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாறுமாகு முன்னர் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த திகதியில் முன்னிலையாக முடியாது என ரணில் விக்ரமசிங்க அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மீண்டும் ஒரு திகதியை அறிவித்து 25 ஆம் திகதி முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுத்துள்ளது.
எனினும், தனது சட்டத்தரணி இன்னும் வெளிநாட்டில் இருப்பதாகவும் அவர் வந்ததும் ஒரு திகதியை வழங்குவதாகவும் இன்று ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
