இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய டேவிட் வோர்னரின் ஓய்வு
ரி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் இருந்து அவுஸ்திரேலியா(Australia) வெளியேறியதை அடுத்து அந்த அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டேவிட் வோர்னர்(David Warner) ஓய்வை அறிவித்துள்ளார்.
37 வயதான டேவிட் வார்னர் அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் தற்போது ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தமை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
டேவிட் வோர்னர் அவுஸ்திரேலியா அணிக்காக ஜனவரி 11ஆம் திகதி 2009 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக டேவிட் வோர்னர் ரி20 போட்டியில் அறிமுகமானார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
அதன் பிறகு 15 ஆண்டுகளாக அவுஸ்திரேலியா அணிக்காக டேவிட் வோர்னர் விளையாடி வருகிறார். 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,786 ஓட்டங்களை அடித்திருக்கிறார். இதேபோன்று 161 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 6932 ஓட்டங்களும், 110 டி20 போட்டிகளில் விளையாடி 3278 ஓட்டங்களை அவுஸ்திரேலியாவுக்காக அடித்திருக்கிறார்.
சர்வதேச கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியா அணிக்காக டேவிட் வார்னர் 49 சதங்களை அடித்திருக்கிறார். ஹைடன், கில்கிறிஸ்ட் போன்ற வரிசையில் சிறந்த தொடக்க ஆட்டக்காரர் என்ற பெயரை டேவிட் வார்னர் பெற்றுள்ளார்.
டேவிட் வார்னர் கிரிக்கெட் வாழ்க்கையில் பல்வேறு உச்சங்களும் சரிவுகளும் இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதற்கான சர்ச்சையில் ஸ்மித், டேவிட் வோர்னர் ஆகியோர் சிக்கினர்.
அவுஸ்திரேலியா அணி
இதனால் இருவருக்கும் ஒரு ஆண்டு வரை அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்க தடை விதித்தது. எனினும் அந்த தடையிலிருந்து மீண்டு வந்த டேவிட் வார்னர் மீண்டும் அவுஸ்திரேலியா அணியில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தார்.
2015 உலகக்கோப்பை, 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை, 2021 ரி20 உலக கோப்பை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் என பல்வேறு சாதனைகளை அவுஸ்திரேலியா அணிக்காக டேவிட் வோர்னர் வென்று உள்ளார்.
அது மட்டும் இல்லாமல் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக எந்த ஒரு உள்ளூர் கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாமல் அவுஸ்திரேலியா அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடிய முதல் வீரர் என்ற சாதனையை டேவிட் வோர்னர் படைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |