சஜித்திற்கு மேலும் வலுக்கும் பலம்! புதிதாக இணைந்த முன்னாள் எம்.பி
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரித்த திசேரா எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பில் அவரது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவிக்கையில்
“நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையை கருத்திற்கொண்டு சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்வதற்கு நான் மிகவும் தீர்க்கமான முடிவை எடுத்தேன்.
15 வருட நாடாளுமன்ற அனுபவம்
எனது அரசியல் வரலாற்றிலும் நிகழ்காலத்திலும் இது மிகவும் முக்கியமான தருணம், எனது 15 வருட நாடாளுமன்ற அனுபவத்துடன் எனது நாத்தாண்டி தொகுதிக்கும் புத்தளம் மாவட்டத்திற்கும் தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என்பதே எனது ஒரே நம்பிக்கை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அண்மையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் டி சில்வாவும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துகொண்டார்.
இந்நிலையில் அவருக்கு அம்பலாங்கொடை தொகுதி அமைப்பாளர் பதவி வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 18 மணி நேரம் முன்
