யாழில் பிரபல வர்த்தகரின் மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு!
Sri Lanka Police
Jaffna
By pavan
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
32 வயது மதிக்கத்தக்க இளைஞனே கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் நேற்று(21) மாலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் ஐஸ் போதைப் பொருளை அதிகளவில் பாவித்த நிலையில் உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழப்புக்கான காரணம்

மீட்கப்பட்ட சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய தினமே சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
அதன் பின்னரே உயிரிழப்புக்கான உறுதியான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.