வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்
Jaffna
Sri Lanka
Eastern Province
Northern Province of Sri Lanka
By Shadhu Shanker
வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் இன்று காலை மூன்று ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கரையொதுங்கும் ஆமைகள்
ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் இவ்வாறு கைவிடப்பட்ட நிலையில் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றது.
மேலும் சமீப காலமாகவே வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் மர்மமான பல பொருட்கள் கரையொதுங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி