எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அரசின் அதிரடி அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Crisis Petrol diesel price Fuel Price In World NPP Government
By Thulsi Jun 17, 2026 01:59 AM GMT
Report

உள்நாட்டில் மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கூடிய முதல் சந்தர்ப்பத்திலேயே எரிபொருள் விலை குறைப்புக்கான பலன் வழங்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

எனினும், உலக சந்தையில் நிலவும் தற்போதைய நிச்சயமற்ற தன்மை காரணமாக, விலை குறைக்கப்படும் குறிப்பிட்ட காலப்பகுதியை தற்போதைக்கு உறுதியாகக் கூற முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

யாழ் போதனாவில் இளம் பெண்ணை அவமானப்படுத்திய வைத்திய நிபுணர்! காவல்நிலையத்தில் முறைப்பாடு

யாழ் போதனாவில் இளம் பெண்ணை அவமானப்படுத்திய வைத்திய நிபுணர்! காவல்நிலையத்தில் முறைப்பாடு

உலக சந்தையில் எண்ணெய் விலை

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:- "உலக சந்தையில் ஏற்படும் சாதகமான மாற்றங்களின் நன்மைகளை மக்களுக்கு நேரடியாகக் கடத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும்.

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அரசின் அதிரடி அறிவிப்பு | New Fuel Prices Sri Lanka Fuel Price Revision

நாட்டின் பொருளாதாரச் செயற்பாடுகளை எவ்வித தடையுமின்றி சீராக முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டுமாயின் மக்களுக்கு இந்த எரிபொருள் நிவாரணங்களை வழங்குவது அவசியமாகும்.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் இன்னும் இறுதி உடன்பாடு எட்டப்படவில்லை. ஒருவித நிச்சயமற்ற நிலைமையே நீடிக்கின்றது.

எனினும், இரு தரப்பினரும் இந்த உடன்படிக்கையில் கையெழுத்திடும் பணிகள் வரும் வெள்ளிக்கிழமைக்குள் அதிகாரபூர்வமாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெள்ளிக்கிழமை இந்த உடன்படிக்கை கையெழுத்தான பின்னர் உலகப் பொருளாதார நிலைமை சாதகமான முறையில் மாறும் என நம்பப்படுகின்றது. அந்தச் சாதகமான சூழ்நிலையின் நல்ல பலன்கள் எமது நாடு போன்ற நாடுகளுக்கும் கிடைக்கும் பட்சத்தில், அதன் நன்மைகள் நிச்சயமாக மக்களுக்கு வழங்கப்படும்.

மட்டக்களப்பில் அடித்து நொறுக்கப்பட்ட வயோதிபரின் வீடு: தப்பியோடிய சந்தேகநபர்கள்!

மட்டக்களப்பில் அடித்து நொறுக்கப்பட்ட வயோதிபரின் வீடு: தப்பியோடிய சந்தேகநபர்கள்!

எரிபொருள் கப்பல்

இந்த மாதத்துக்காக முற்பதிவு செய்யப்பட்ட அனைத்து எரிபொருள் கப்பல்களும் ஏற்கனவே நாட்டை வந்தடைந்துள்ளன.

எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் அரசின் அதிரடி அறிவிப்பு | New Fuel Prices Sri Lanka Fuel Price Revision

மேலும் ஒரு மசகு எண்ணெய் கப்பல் மாத்திரமே வர வேண்டியுள்ளது. தற்போதும் கூட திறைசேரியிலிருந்து கணிசமான அளவு தொகையை மானியமாக வழங்கித்தான் தற்போதைய எரிபொருள் விலை இந்த மட்டத்தில் பேணப்பட்டு வருகின்றது.

ஏப்ரல் மாதம் வரை முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட எரிபொருள் மானியப் பொதிக்காக 100 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததுடன், இந்த ஜூன் மாதத்துடன் அந்த மானியக் காலம் முடிவடைகின்றது.

தற்போது மாதத்தின் நடுப்பகுதி என்பதால் உலகச் சந்தை மாற்றங்களைச் சாதகமாக உற்றுநோக்க வேண்டியுள்ளது.

எனவே, தற்போதே அவசரப்பட்டு தீர்மானங்களை எடுத்து மாத இறுதியில் என்ன நடக்கும் என்று கூறுவது நியாயமற்றது என்றார்.

றீச்ஷாவின் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி...! வழங்கி வைக்கப்பட்ட பரிசில்கள்

றீச்ஷாவின் மாபெரும் மரதன் ஓட்டப் போட்டி...! வழங்கி வைக்கப்பட்ட பரிசில்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025