கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு
ஈஸ்டர் தாக்குதல்களுடன் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் தொடர்பு குறித்து அரசாங்கத்திடம் தற்போது எந்தத் தகவலும் இல்லை என்றாலும், அவரைக் கைது செய்வதா இல்லையா என்பது விசாரணைகளின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என்று அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
எனவே, கோட்டாபய ராஜபக்சவைக் கைது செய்வதா இல்லையா என்பது அரசியல் நலன்களின் அடிப்படையில் அல்ல, மாறாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் நடத்தப்படும் விசாரணைகளில் வெளிப்படுத்தப்படும் உண்மைகள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே தீர்மானிக்கப்படும் என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
விசாரணைகளால் சில தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள அச்சம்
ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்படும் விதத்தையும், உண்மைகள் வெளிப்படுத்தப்படும் விதத்தையும் பார்க்கும்போது, அந்த விசாரணைகள் முறையாக முன்னேறும்போது, அது தங்களை நோக்கியே வந்துவிடும் என்ற அச்சம் சில தரப்பினரிடையே இருக்கலாம் என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ கூறுகிறார்.

“குற்றப் புலனாய்வுத் துறையானது, சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் மற்றும் விசாரணைகளின் அடிப்படையில் செயல்படுகிறது. ஒருவேளை திருடன், திருடனுக்கு முன்பாகவே வேலியைத் தாண்டியிருக்கலாம், யாருக்குத் தெரியும்.” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |