வடக்கை அச்சுறுத்தும் கொடிய நோய் -யாழில் மட்டும் நால்வர் கண்டுபிடிப்பு

people northern province disease caution
By Sumithiran Feb 18, 2022 05:16 PM GMT
Report

வடக்கு மாகாணத்தில் தற்பொழுது மலேரியா நோய் பரவும் அனர்த்த நிலையுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நான்கு வார காலத்திற்குள் 4 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு நோயாளரை அடையாளம் காண்பதன் மூலம் அது ஆயிரம் நோயாளர்களின் ஆரம்பமாக அமையும் என்று சுகாதார அமைச்சின் மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

இந்த நான்கு நோயாளர்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவாகியிருப்பதாக அவர் கூறினார். இந்த நோய் பரவும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஏனைய மாவட்டங்களில் இந்த நோய் பரவும் அனர்த்த நிலை இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி 2 நோயாளர்கள் யாழ்ப்பாணத்தில் பதிவாகியிருந்தனர். இதன் பின்னர் இரண்டு வாரங்களில் மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டனர். 4 வார காலத்திற்குள் யாழ்ப்பாணத்தில் 4 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கை ஒரு சிறிய நாடு இவ்வாறான நாட்டில் ஒரு பிரதேசத்தில் நோய் அனர்த்த நிலை இருக்கின்றது என்பது அது நாட்டிற்கே அனர்த்த நிலையாகும். இதுதொடர்பில் நாம் மகிழ்ச்சியடைய முடியாது. அதாவது ஒரு பகுதியில் மாத்திரம் இந்த அனர்த்தம் இருப்பதாக கருத முடியாது. இந்த அனர்த்த நிலையில் இருந்து யாழ்ப்பாணத்தை மீட்டெடுப்பதற்காக மலேரியா ஒழிப்பு குழு, சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் அந்த மாகாணத்தின் வைத்தியசாலை பணிப்பாளர்கள் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.

இந்த வருடத்தில் இலங்கையில் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை 6 .இவர்கள் அனைவரும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து வருகை தந்த நோயாளர்கள். இவர்களை நாம் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் வைத்து சிகிசையளித்து மீட்டெடுத்துள்ளோம்.

6 ஆவது நோயாளர் அனுராதபுரத்தில் ஹபரண பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டார். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களில் தான் இவர் காணப்பட்டார். இவர் எந்தவொரு நோய் அறிகுறிகளையும் கொண்டிருக்கவில்லை. இதேபோன்று எமது வைத்திய குழு இவரை அடையாளம் கண்டது பாரிய வெற்றியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இவற்றை நாம் கவனத்தில் கொள்ளாது இருந்தால் மலேரியா நோய் தொற்றிய ஒருவர் மூலம் 1000 நோயாளர்கள் உருவாதற்கு ஆரம்பமாக அமையும். சுகாதார ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்புகளுக்கு இடையிலேயே இந்த நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

ReeCha
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020