மேலும் மூவரை பலியெடுத்தது கொரோனா!
SRILANKA
covid-19
death
By Vasanth
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது. மெதிரிகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும், பொல்கஸ்ஓவிட பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய பெண் ஒருவரும், மற்றும் ஆடிகம பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய ஆண் ஒருவரும் இன்று உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை இன்று மேலும் 182 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.