தடுப்பு காவலில் இளம் குடும்பஸ்தர் மரணம் : 3 காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம்
போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் ஹோமாகம காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இளம் குடும்பஸ்தரான சந்தேகநபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அந்த காவல் நிலையத்தின் மூவர் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, அந்த காவல் நிலையத்தின் குற்றப் பிரிவின் பொறுப்பதிகாரி, உப காவல் பரிசோதகர் ஒருவர் மற்றும் காவல்துறை சார்ஜன்ட் ஆகியோரே பணி நீக்கம் செய்யப்பட்டவர்களாவர்
மரணம் தொடர்பான மேலதிக விசாரணை
மேலும், இந்த மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை நாளை (27) நடைபெறவுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் கிரிவத்துடுவை பகுதியைச் சேர்ந்த இஷார ஹர்ஷ குமார என்ற 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். காவல்துறையின் கொடூரத் தாக்குதல் காரணமாகவே சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக உயிரிழந்தவரின் உறவினர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |