யாழில் பிரதேச சபை உறுப்பினரின் கணவர் கத்திகுத்து தாக்குதலில் பலி
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஜெனிற்றா என்பவரின் கணவரான தவனேசன் (40 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மதுபோதையில் கூச்சல்
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் மருதங்கேணி வீரபத்திரர் கோவிலை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நபர் ஒருவர் மது போதையில் கொலையுண்ட நபரது வீட்டுக்கு முன்னால் நின்று கூச்சலிட்டுக் கொண்டிருந்துள்ளார்.
வீதியில் வழிமறித்து கத்திகுத்து தாக்குதல்
இந்நிலையில் கொலையுண்ட நபர் மது போதையில் கூச்சலிட்டவர் வெளியேறி சென்றுவிட்டார் என்று கருதி மருதங்கேணி பகுதிக்கு சென்றுகொண்டிருக்கும்போது கூச்சலிட்டவர் வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கத்தி குத்துக்கு இலக்கானவரை மருதங்கேணி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |