ஹமாஸின் இராணுவ பிரிவு தலைவரையும் போட்டு தள்ளியது இஸ்ரேல்
ஹமாஸின் ராணுவப் பிரிவு தலைவா் முகமது சின்வாா் இஸ்ரேல் தாக்குதலில் கடந்த மே மாதம் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், அவரது மரணத்தை ஹமாஸ் சனிக்கிழமை உறுதி செய்தது.
2023, ஒக்டோபா் 7-ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் படையினா் தாக்குதல் நடத்தினா். அந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவா் ஹமாஸ் படையின் தலைவா் யாஹ்யா சின்வாா். இவரின் இளைய சகோதரா் முகமது சின்வாா்.
கடந்த மே மாதம் படுகொலை
யாஹ்யா சின்வாா் 2024-ஆம் ஆண்டு இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், முகமது சின்வாா் ஹமாஸின் ராணுவப் பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தாா். அவரை கடந்த மே மாதம் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்தது.
அதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்த ஹமாஸ், முகமது சின்வாா் மரணத்தை தற்போது ஒப்புக்கொண்டுள்ளது. அவா் எப்படி இறந்தாா் என ஹமாஸ் தெரிவிக்கவில்லை.
ஹமாஸ் வெளியிட்ட அறிவிப்பு
ஆனால், அவரும் பிற ஹமாஸ் தலைவா்களும் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு அவா்களை தியாகிகள் எனக் குறிப்பிட்டுள்ளது. முகமது சின்வாா் மரணத்தையடுத்து, அவரது நெருங்கிய உதவியாளரான இஷ்-அல்-தின் ஹதாத், ஹமாஸின் ராணுவப் பிரிவு தலைவராகப் பொறுப்பேற்றுள்ளாா்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
