குற்றவாளி இன்றி 28 வருடங்களுக்கு பின்னர் விதிக்கப்பட்ட மரணதண்டனை
Sri Lanka Police
Sri Lanka Magistrate Court
Murder
By Sumithiran
1996ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி அம்பலாங்கொடை ரயில் வாயிலுக்கு அருகில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
பலப்பிட்டிய மேல் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்றி இந்த வழக்கு நீண்ட நேரம் விசாரிக்கப்பட்டு, இறுதியாக தீர்ப்பு நேற்று (19) அறிவிக்கப்பட்டது.
இரண்டாவது குற்றவாளிக்கு மரண தண்டனை
கொலை வழக்கின் இரண்டாவது குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளி வெளிநாட்டில்
தற்போது வெளிநாட்டில் உள்ள அவர் கைது செய்யப்பட்ட நாள் முதல் இந்த தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழர் பகுதியில் அபிவிருத்தி எனும் போர்வையில் ஆக்கிரமிப்பினை ஏற்படுத்த முனையும் அரசு: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாடல்
கைது செய்யப்பட்டவர் அம்பலாங்கொட பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடையவர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்