நாட்டில் தொடரும் கொலைச் சம்பவங்கள்! கொலை செய்யப்பட்ட 19வயதுடைய யுவதி
கலேவெல, பட்டிவெல சந்தியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயிரிழந்த பெண் 19 வயதானவர் என்பதுடன், 42 வயதான குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தாயை இழந்த 17 வயதான குறித்த சிறுமி சிறுவர் காப்பகமொன்றில் வளர்ந்து வந்துள்ளதுடன், புத்தாண்டு விடுமுறைக்காக வீட்டிற்கு வந்துள்ளார்.
கொலை செய்யப்பட்ட பெண் அவரின் உறவினர் என்பதால் அவரது வீட்டில் மகளை தங்க வைத்ததாகவும், அதன்போதே அவர் தனது மகளை வயது கூடிய நபரொருவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றுள்ளதாகவும் சிறுமியின் தந்தை பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த அவர், குறித்த பெண் பணிபுரியும் புத்தக விற்பனை நிலையத்திற்கு சென்று அவரை கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கலேவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.