லெபனான் மீது இதுவரை இல்லாத அளவு இஸ்ரேல் தாக்குதல்....! அதிகரிக்கும் பலி
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே இரண்டு வார கால போர் நிறுத்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் இன்னும் தொடர்ந்தபடி உள்ளது
லெபனான் எல்லையில் உள்ள பல கிராமங்களை இஸ்ரேல் தகர்த்துள்ளதாக லெபனான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் ஏவுதளங்களை அழிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
அமைதி ஒப்பந்தம்
லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,055 ஆக அதிகரித்துள்ளது.

லெபனானின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 02 ஆம் திகதி அன்று இஸ்ரேலியத் தாக்குதல் தொடங்கியதிலிருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2,055 ஆக உயர்ந்துள்ளதாக லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் இதில் குறைந்தது 6,588 பேர் காயமடைந்துள்ளதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் லெபனானுடன் அமைதி ஒப்பந்தம் செய்ய விரும்புவதாகவும், ஆனால் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுடன் எந்த ஒப்பந்தமும் கிடையாது என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியுள்ளார்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |