தாளையடி கடற்கரையில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்! பாதுகாப்பு குறித்து கேள்வி
அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரையின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களுடைய சமாச தலைவர் த.தங்கரூபன் தெரிவித்துள்ளார்.
தாளையடி கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் உயிரிழப்பது தொடர்பாக எமது பிரதேச ஊடகவியலாளரால் சமாச தலைவரிடம் கேள்வி எழுப்பிய நிலையிலையே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மாரி காலம் என்று அழைக்கப்படும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் இந்த காலப்பகுதியில் கடலுக்குள் நீராடுபவர்கள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என கூறியுள்ளார்.
கடலில் இறங்குவதற்கு தடை
காவல்துறையினர் மற்றும் கடற்றொழில் அமைச்சருடன் கலந்தாலோசித்து இனி வரும் காலங்களில் கார்த்திகை மார்கழி மாதங்களில் கடலில் இறங்குவதற்கு தடை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தாளையடி கடற்கரை பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக நாங்கள் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறோம் என்றும், இரண்டு பாதுகாவலர்கள் பணி அமர்த்தப்படுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |