அதிரடியாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு! அம்பலமாகப்போகும் ஊழல்கள்
கொழும்பு மாநகர சபையில் (CMC) நடந்ததாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகளை விசாரிக்க அரசாங்கம் ஜனாதிபதி ஆணைக்குழு வொன்றை நியமித்துள்ளது.
இது உள்ளூர் நிர்வாகத்தில் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கான வலுவான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
இந்த ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தமானி அறிவிப்பு
மேலும், கணக்காளர் E. R. M. S. H. ஏகநாயக்க மற்றும் முன்னாள் சிரேஷ்ட காவல்துறை கண்காணிப்பாளர் D. S. விக்ரமசிங்க ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் செயலாளர் கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் இந்த நியமனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதன்படி, ஆணைக்குழு விசாரணையை நடத்தி அதன் கண்டுபிடிப்புகள் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

