தையிட்டி விகாரையில் முளைக்கும் புத்தர் சிலை - வதந்தி என்கிறார் விகாராதிபதி
யாழ்ப்பாணம் - தையிட்டி விகாரைக்கு தெற்கிலிருந்து புத்தர் சிலை கொண்டுவரப்படுவதாக பரவும் செய்திகள் உண்மை அல்ல என என தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின்தோட்டே நந்தாராம தேரர் தெரிவித்துள்ளார்
தையிட்டி விகாரையில் நேற்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 3 ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் விகாரையில் வழமையான பூஜை வழிபாடுகள் மாத்திரமே நடைபெறும்.
அனுமதியும் வழங்கவில்லை
அன்றைய தினம் எவ்வித விசேட பூஜைகளுக்கும் தாம் இடமளிக்கவில்லை என விகாராதிபதி ஜின்தோட்டே நந்தாராம தேரர் குறிப்பிட்டுள்ளார்.

தெற்கிலிருந்து புத்தர் சிலை கொண்டுவரப்படுவதாகவும், விசேட பெரஹரா நடைபெறவுள்ளதாகவும் பரவும் செய்திகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அத்தகைய நிகழ்வுகளுக்குத் தாம் எவ்வித அனுமதியும் வழங்கவில்லை என்றும், அரசியல் நோக்கங்களுக்காகக் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அத்துடன், விகாரை அமைந்துள்ள தனியார் காணிகள் தொடர்பான சர்ச்சையை விசாரிக்க அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய குழுவிடம் விகாரைக்குரிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், தை மாதம் மூன்றாம் திகதி பௌர்ணமி தினத்தில் வலி வடக்கு தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ ராஜ மகா விகாரையில் புதிய புத்தர் சிலையை நிறுவுவதற்கான பாதுகாப்பு அனுமதி கோரி பாதுகாப்பு தரப்பினருக்கு மகா சங்கத்தினரால் எழுத்து மூலம் கடிதம் அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |