ஆப்கானில் தலிபான்களுக்கு விழுந்த மரண அடி - ஆட்டத்தை தொடங்கியது ஐ.எஸ் அமைப்பு
ஆப்கானிஸ்தானில்,நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளில் 35 தலிபான்கள் கொல்லப்பட்டதாக ஐ.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
தலிபான்களும், ஐ.எஸ் அமைப்பினரும் சன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற போதும் மதம் மற்றும் கொள்கை சார்ந்த முடிவுகளில் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் ஒருவரை ஒருவர் இரத்தக்களரியாக மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களில், ஜலாலாபாத் நகரின் 4 வெவ்வேறு இடங்களில் தலிபான்கள் சென்ற வாகனங்களை குறி வைத்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன.
அமெரிக்க படைகள் ஆப்கனை விட்டு வெளியேறிய பின் நிகழ்த்தப்பட்ட மிகப்பெரும் பயங்கரவாத தாக்குதலாக இது கருதப்படுகிறது.
4 குண்டு வெடிப்புகளுக்கும் பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ் அமைப்பினர் இதில் 35 க்கும் மேற்பட்ட தலிபான்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் எனத் தங்கள் Telegram Channel-ல் தெரிவித்தனர்.