சூடானில் பயங்கர மோதல்! பலி எண்ணிக்கை 83ஆக உயர்வு
Death
Army
People
War
By Vasanth
சூடானில் பழங்குடியினர் இடையே இடம்பெற்ற பயங்கர மோதலில் 83 பேர் உயிரிழந்துள்துள்ளதாகஅந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சூடானில் தார்பூர் நகரில் ஐ.நா சபை மற்றும் ஆபிரிக்க யூனியனின் 13 ஆண்டு கால அமைதிகாக்கும் திட்டம் முடிவுக்கு வந்தது. இதனை முன்னிட்டு ஆயுத படையினரை திரும்ப பெறுவது என முடிவானது. இச் சம்பவம் இடம்பெற்று 2 வாரங்களில் சூடானில் அல் ஜெனீனா நகரில் மசாலித் என்ற பழங்குடியின குழுவினருக்கும் அராப் பழங்குடியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இம் மோதல் காரணமாக அப் பகுதியிலுள்ள பல்வேறு கட்டிடங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.
மேலும் பழங்குடியினரில் 83 பேர் கொல்லப்பட்டதுடன், இதில் சில ஆயுதபடை அதிகாரிகள் உட்பட 160 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி