காயங்களுக்குள்ளான நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
srilanka
police
vavuniya
death
investigation
By Vasanth
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட எருக்கலம்கல் பகுதியில் காயங்களுக்குள்ளான நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியைச் சேர்ந்த சிவகுமார் சித்திரகலா என்ற 36 வயதான பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது தலைப்பகுதியில் பலத்த காயம் ஒன்றும் அவதானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் நேற்று வீட்டில் இருந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில் சடலமாக கிடந்துள்ளார். இதனை அவதானித்த குறித்த பெண்ணின் கணவர் சம்பவம் தொடர்பில் அயலவர்களிற்கும், பொலிஸாருக்கும் தெரியப்படுத்தினார்.
குறித்த பகுதிக்குச் சென்ற பூவரசங்குளம் பொலிஸார் சடலத்தினை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி