சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Sri Lanka Police Weather Disease
By Sathangani Aug 04, 2026 05:04 AM GMT
Report

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் அனர்த்தங்கள் காரணமாக உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி, ஹட்டன் - பொல்பிட்டிய, மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில், அங்கு இருந்த 47, 83 மற்றும் 58 வயதுடைய மூன்று பெண்களும் 22 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

கண்டி, நுவரெலியா மாவட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

கண்டி, நுவரெலியா மாவட்ட பாடசாலைகள் நாளை மீண்டும் திறப்பு!

மண்மேடு சரிந்து வீழ்ந்து உயிரிழப்பு 

மேலும், வட்டவளை, ஞானானந்தகம வீதியில் உள்ள மகாவலி கங்கைக்கு குறுக்காக உள்ள பாலத்தின் மீது பயணித்த 53 வயதுடைய நபர் ஒருவர் மகாவலி கங்கையில் அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்துள்ளார்.

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! | Deaths Number Due To Disasters Has Increased To 7

அத்துடன், நாவலப்பிட்டி, சோலங்கந்த, ஜனஉதான கிராமத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளையில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட பிரதிப் பணிப்பாளர் இந்திக ரணவீர நேற்று (03) உறுதிப்படுத்தினார்.

100 mm இலும் கூடிய பலத்த மழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

100 mm இலும் கூடிய பலத்த மழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

காணாமல் போயுள்ளார்

அத்துடன், கினிகத்தேனை, அம்பகமுவ பகுதியில் நபர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். இவ்வாறு காணாமல் போயுள்ளவர் அப்பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு! | Deaths Number Due To Disasters Has Increased To 7

இதனிடையே, சீரற்ற வானிலை காரணமாக மூவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் நிலவும் சீரற்ற வானிலையைக் கருத்திற்கொண்டு, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் இன்று (4) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மண்சரிவில் காணாமல் போன நான்கு பேரின் உடல்களும் மீட்பு!

மண்சரிவில் காணாமல் போன நான்கு பேரின் உடல்களும் மீட்பு!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்