காட்டு பகுதியிலிருந்து பெண்ணின் சிதைந்த எலும்புகள் மீட்பு
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
By Jaso
வெலிகந்த, குடபுகுன காப்புக்காட்டில் சிதைந்த நிலையில் எலும்புகள் மற்றும் பெண்களின் ஆடைகளின் சில பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நேற்று (17) வெலிகந்த காவல்துறைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த எலும்புகள் மற்றும் பெண்களின் ஆடைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
2019 ல் காணாமற் போன் பெண்
இந்த எலும்புத் துண்டுகள் இருந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பெண்களின் ஆடைகள், முக்காடு மற்றும் மதிய உணவுப் பெட்டியின் துண்டுகள் 14.11.2019 அன்று சிஹான்புர வெலிகந்த பிரதேசத்தில் காணாமல் போன பெண் ஒருவருடையது என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

எலும்புகளை அடையாளம் காண அறிவியல் சோதனை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.