அதிபரின் செயலாளரால் விசேட வர்த்தமானி வெளியீடு
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
Sri Lanka Government Gazette
By Jaso
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் செயலாளரின் கையொப்பத்துடன் கூடிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பேணுவதற்கு அத்தியாவசியமான சேவைகளுக்கு தடை அல்லது இடையூறு ஏற்படக்கூடும் என கருதி இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்தியாவசியமான சேவைகளுக்கு இடையூறு
அதன்படி, மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும்

பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் வழங்கல் அல்லது விநியோகம்
மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், மருந்தகங்கள் மற்றும் பிற பொது நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, உணவு மற்றும் சிகிச்சை தொடர்பாக தேவைப்படும் அனைத்து சேவைகள், வேலை அல்லது உழைப்பு ஆகியவை அத்தகைய அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.