ரஷ்ய இராணுவத்தில் இணையும் இலங்கையர்கள் : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
ரஷ்ய இராணுவத்தில் இனி இலங்கையர்கள் இணைத்துக்கொள்ளப்பட மாட்டார்கள் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செரன் லாவ்ரோவ் (Sergey Lavrov) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ரஷ்யாவிற்கு (Russia) விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடனான (Ali Sabry) சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பில் இரு வெளிவிவகார அமைச்சர்களும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையர்கள்
அத்தோடு, இதன்போது ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சர் அலி சப்ரியுடன் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வெளிவிவகார அமைச்சின் கூற்றுப்படி இலங்கையின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவும் ஜூன் 26-27 திகதிகளில் ரஷ்ய அதிகாரிகளுடன் இது குறித்து விவாதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |