நிகழ்நிலை விசா தொடர்பான இறுதித் தீர்மானம்: பொது பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விசா வழங்கும் முறை குறித்து நாளை (05) தீர்மானம் எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்னர் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நிகழ்நிலை விசா
இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இ-விசா சேவையை வழங்க அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் இடைக்காலத் தடை விதித்தது.
இதன்படி, ஓகஸ்ட் 2 ஆம் திகதி இரவு முதல் நடைமுறைக்கு வரும் நிகழ்நிலையின் ஊடாக விசா வழங்குவதை இடைநிறுத்துவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்தது.
மீள செலுத்தப்படும் பணம்
மேலும், குறித்த இணையத்தளம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், விசா பெற்றுக் கொள்வதற்காக பணம் செலுத்திய நபர்களுக்கு அது தொடர்பான பணத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் வழங்கப்படும் ஒன் அரைவல் (ON ARRIVAL) விசாக்கள் மாத்திரமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |