இஸ்ரேலில் வேலைவாய்ப்புக்காக பறக்கப்போகும் ஆயிரக்கணக்கான இலங்கையர்கள்
2025 ஆம் ஆண்டளவில் இஸ்ரேலில் தாதியர் துறையில் 2,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் இன்று (18) வரை, இஸ்ரேலில் தாதியர் துறையில் 148 இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் வீட்டு செவிலியர் வேலைகளுக்காக பெப்ரவரி 24 அன்று இஸ்ரேலுக்குப் புறப்படவுள்ள 155வது தொகுதியைச் சேர்ந்த 17 செவிலியர் நிபுணர்களுக்கான விமான பற்றுச்சீட்டுகள் வழங்கும் நிகழ்வு இன்று (2025.02.18) பணியகத்தில் நடைபெற்றது, இதில் 15 பெண்கள் மற்றும் 02 ஆண்கள் அடங்குவர்.
வேலை வாய்ப்புகள்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் இஸ்ரேலின் PIBA நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலில் தாதியர் துறையில் 2,038 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, இஸ்ரேலில் தாதியர் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு இலங்கையர்களுக்கு உரிமை உள்ளதால், இஸ்ரேலில் தாதியர் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்காக எந்தவொரு நபருக்கும் பணம் கொடுப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
