ரணில் பிரதமராக பதவியேற்றவுடன் நாமல் ராஜபக்ச எடுத்த முடிவு
பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற உடனேயே நான் எந்தவொரு அமைச்சுப் பொறுப்பையும் ஏற்கக் கூடாது என முடிவு எடுத்துவிட்டேன் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடையை தற்காலிகமாக நீக்குவதற்கு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதன்போது, நீதிமன்றத்தில் இருந்து வெளியே செல்லும் போது ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில், நான் கோட்டாய ராஜபக்சவின் அமைச்சரவையில் இருந்து விலகினேன். ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்ட போது நான் அமைச்சரவைக்கு வருவதில்லை என்று கூறினேன்" என குறிப்பிட்டார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,