புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகள் பூட்டு..!
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நாளை (13) மற்றும் நாளை மறுதினம் (14) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மதுவரித் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. எதிர்வரும் பண்டிகைக் காலம் முழுவதும் விநியோகச் சங்கிலி ஒழுங்குமுறை நடவடிக்கைகளைக் கண்காணிக்க, விசேட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திணைக்களத்தின் பேச்சாளரான மதுவரி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, சட்டவிரோத மதுபான விற்பனையை முறியடிக்கும் நோக்கில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத மதுபான விற்பனை
இந்த நடவடிக்கை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தொடருமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பில் 1913 என்ற விசேட தொலைபேசி இலக்கத்திற்கு மக்கள் தகவல்களை வழங்க முடியும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.