யுக்திய நடவடிக்கைகளில் இணையும் இராணுவத்தினர்
Nihal Talduwa
Sri Lanka Police
Sri Lanka
Drugs
By Sathangani
குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இன்று (11) முதல் இராணுவத்தினரின் ஆதரவைப் பெறுவதற்கு காவல்துறையினர் தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை அனைத்து காவல் நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இராணுவத்தினரை தொடர்புகொள்ள முடியும்
"இன்று முதல் யுக்திய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். காவல்துறை அதிகாரிகளின் குறைபாடுகள் இருந்தால், அந்த சோதனைகளுக்கு போதுமான அதிகாரிகள் இல்லை என்றால், குறிப்பாக வீதி மறியல் போன்றவற்றை செயல்படுத்த வேண்டும் என்றால், கடுமையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டியிருந்தால், அந்த மாகாணத்திற்குப் பொறுப்பான உயர் அதிகாரிகள் ஊடாக இராணுவத்தினரை தொடர்பு கொள்ள முடியும்'' என அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 4 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி