இலங்கையில் வீழ்ச்சியடைந்துள்ள ‘குடி’காரர்கள்
Sri Lanka
Sri Lankan Peoples
Money
By Sumithiran
15 மணி நேரம் முன்
இலங்கையில் மதுபானம் அருந்துவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி 2023ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நாட்டின் கலால் வரி வருமானம் 350 கோடி ரூபாவினால் குறைந்துள்ளதாக கலால் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீழ்ச்சியடைந்த வருமானம்
2022 ஆம் ஆண்டு ஜனவரி, பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் கலால் வரி வருமானம் 2,860 கோடி ரூபாயாகும். ஆனால், 2023 ஜனவரி, பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் 2,510 கோடி ரூபாய் மட்டுமே வருமானமாக கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் கலால் வருமான வரி இலாபம் இவ்விரண்டு மாதங்களிலும் 12.2 சதவீதத்தால் குறைந்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இனவாதத்தை இடமாற்ற முற்படும் வேலை நிறுத்த போராட்டங்கள்! 6 நாட்கள் முன்
