வடக்கு மற்றும் கிழக்கு கடற்தொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
Sri Lanka
Eastern Province
Northern Province of Sri Lanka
By Beulah
அடுத்துவரும் மணித்தியாலங்களில் மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் கொந்தளிப்பாக காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் தற்போது சூறாவளியாக மாறியுள்ளதால், வடக்கு மற்றும் கிழக்கு கடற்பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து மேலும் அறியத்தருகையில்,
பலத்த மழை வீழ்ச்சி
“இந்த சூறாவளி நாளை மறுதினம் இந்தியாவின் தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்கும்.
இந்தநிலையில், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும், நாளை 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.” என எதிர்வுக்கூறியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்