உலகம் முழுவதும் ஹமாசை தேடி தேடி வேட்டையாட தயாராகும் இஸ்ரேலின் புலனாய்வுப் பிரிவுகள்! (காணொளி)
கடந்த ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பங்குபற்றிய ஹமாஸ் உறுப்பினர்களை படுகொலை செய்யும்படியான உத்தரவை இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமீன் நெதன்யாகு இஸ்ரேலிய புலனாய்வு பிரிவினருக்கு பிறப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் ஓர் முன்னணி ஊடகமான த வோல்ஸ் கிறீன் ஜேர்னல் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டு சுமார் 1200 இஸ்ரேலியர்களை படுகொலை செய்து, ஏராளமானவர்களை உயிருடன் பிடித்து சென்றிருந்த அந்த சம்பவத்தில் தொடர்புடைய அத்தனை ஹமாஸ் உறுப்பினர்களையும் தேடி தேடி வேட்டையாடும் படியாக இஸ்ரேலிய புலனாய்வு பிரிவுகள் களமிறக்கப்பட்டுள்ளதாகவும், அந்த தாக்குதல் சம்பவத்தில் ஏதோ ஒருவகையில் சம்பந்தப்பட்ட நபர்கள் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றாலும், அவர்களையும் தேடி சென்று படுகெலை செய்யும்படியான உத்தரவுகள் இஸ்ரேலிய புலனாய்வு பிரிவுகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காசாவில் யுத்தம் முடிவடைந்து ஒரு வருடத்திற்குள் இந்த வேட்டை நடைபெறுமென்று கூறியுள்ளதோடு, லெபனானிலும், கட்டாரிலும், துருக்கியிலும் சுதந்திரமாக நடமாடி திரியும் ஹமாஸ் உறுப்பினர்களை குறி வைத்த திட்டங்களுடன் ஏற்கனவே இஸ்ரேலிய புலனாய்வு கட்டமைப்புக்கள் களமிறக்கப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளன
இந்நிலையில், மேற்படி சம்பவம் தொடர்பிலான மேலதிக விடயங்களை சுமந்து வருகின்றது, ஐபிசி தமிழின் இன்றைய(03) நிதர்சனம் நிகழ்ச்சி.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |